ஆப்நகரம்

கருப்பு கொடி ஏற்றிய மக்கள்; பஸ் நிலையத்துக்கு எதிர்ப்பு!

பஸ் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் மக்கள் கருப்பு கொடி ஏற்றி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 1 May 2022, 7:18 pm
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்கு தற்போது தினந்தோறும் 80க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
Samayam Tamil கடைகளில் கருப்பு கொடி
கடைகளில் கருப்பு கொடி


இந்நிலையில் இதனை சுற்றியுள்ள பழைய சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவற்றை இடித்து அகற்றி விட்டு இந்த இடத்திலேயே புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்று இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வணிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு ஊருக்கு வெளியே 4 கிலோ மீட்டர் தொலைவில் சிவகங்கை ரோட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூபாய் 3.84 கோடி செலவில் அடிக்கல் நாட்டப்பட்டது.

நகை கடன் தள்ளுபடி; மேலும் ஒரு ஹேப்பி நியூஸ்!

இதையடுத்து இளையான்குடி பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே கடையடைப்பு போராட்டம், முதல்வருக்கு 5 ஆயிரம் தபால்கள் அனுப்பும் போராட்டம் போன்றவை ஏற்கனவே நடத்தியுள்ளனர்.

பீதியில் உறைந்த எச்.ராஜா; ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்!

இந்நிலையில், இன்று இளையான்குடி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து வருகிற 10ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக புதிய பஸ் ஸ்டாண்ட் எதிர்ப்பு குழுவினர் பகிரங்கமாக தெரிவித்து இருக்கின்றனர்.

அடுத்த செய்தி