ஆப்நகரம்

SI Exam: எஸ்ஐ தேர்வு எழுதுவோருக்கு வந்த முக்கிய அறிவிப்பு..!

தமிழ் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே எஸ்ஐ பணிக்கு தகுதி பெற முடியும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 20 Jun 2022, 10:41 am

ஹைலைட்ஸ்:

  • தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு
  • சிவகங்கை மாவட்டத்தில் 4160 பேர் விண்ணப்பித்துள்ளனர்
  • தமிழ் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே எஸ்ஐ பணி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil எஸ்ஐ தேர்வு எழுதுவோருக்கு வந்த முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு ஜூன் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க சிவகங்கை மாவட்டத்தில் 4160 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்காக காரைக்குடியில் ஐந்து இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் 1 துணை காவல் கண்காணிப்பாளர் அங்கு தேர்வு எழுதும் 20 நபர்களுக்கு கண்காணிப்பாளராக பணியாற்ற உள்ளனர். இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள தேர்வு மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டார்.

தேர்வு எழுதுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: "தேர்வு எழுத வருபவர்கள் கருப்புநிற பந்து முனை பேனா கொண்டு வரவேண்டும். எலக்ட்ரானிக் சாதனங்கள், ப்ளூடூத், கால்குலேட்டர், கைக்கடிகாரங்கள் ஆகியவை கொண்டு வரக்கூடாது. விண்ணப்பித்த தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8:30 மணிக்கு வர வேண்டும். காலை 9.50க்கு மணிக்கு மேல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க இயலாது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இத்தேர்வு எழுத விண்ணப்பித்த நபர்கள் தங்களது நுழைவுச் சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டில் தவறுகள் ஏதும் இருந்தால் தேர்வு எழுத விண்ணப்பித்த போது கொடுத்த புகைப்படத்துடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வந்தால் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவர்.

வரும் ஜூன் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுஅறிவுத் தேர்வு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி முதல் 5 மணி வரை தமிழ் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. வழக்கமாக சார்பு ஆய்வாளர் தேர்வில் பொதுத் தேர்வுக்கு 70 மதிப்பெண், உடல்தகுதி தேர்வு 15 மதிப்பெண், சான்றிதழுக்கு 5 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண் வழங்கப்படும்.

தேசிய மாணவர் படை பயிற்சி முகாம்; அழகப்பா பல்கலைக்கழகத்தில் துவக்கம்!

இந்த முறை புதிதாக தமிழ் தகுதி தேர்வு தனியாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சார்பு ஆய்வாளர் பணிக்கு தகுதி உள்ளவர்களாக கருதப்படுவர். இதுதவிர தமிழ் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் மட்டுமே பொது அறிவு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி