ஆப்நகரம்

சிவகங்கையில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம்: மாணவ, மாணவிகள் ஆர்வம்...!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் சிவகங்கையில் நடத்தப்பட்டு வருகிறது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 2 May 2023, 7:53 pm

ஹைலைட்ஸ்:

  • கோடை காலத்தில் சிறப்பு நீச்சல் பயிற்சி வகுப்புகள்
  • பிறரை காப்பாற்ற இப்பயிற்சி உதவுவதாக கருத்து
  • உடல் ஆரோக்கியத்துடன் புத்துணர்ச்சி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
திறந்தவெளி விளையாட்டு அரங்கம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட தலைநகரங்களில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் செயல்பட்டு வருகிறது. சிவகங்கையிலும் இதுபோன்று விளையாட்டு அரங்கம் செயல்படுகிறது.

இங்கு கோடை காலத்தில் மாணவ, மாணவிகளுக்கு, கால்பந்தாட்டம், பூப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு நீச்சல் பயிற்சி வகுப்புகள்

இங்குள்ள நீச்சல் குளத்தில் 7 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு, சிறப்பு நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் கோடை காலத்தில் நடைபெறுவது வழக்கம்.

பயிற்சி கட்டணம்

தினமும் காலை 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் ஒரு மணி நேரம் என 12 நாட்களுக்கு பயிற்சிக்கான கட்டணமாக ரூ.1180 வசூலிக்கப்படுகிறது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீச்சல் பயிற்சியினை பயின்று வருகின்றனர்.
சிவகங்கையில் முதன்முறையாக மாவட்ட அளவிலான கிக்-பாக்ஸிங் போட்டி: நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு
நீச்சல் பயிற்சியினால் புத்துணர்ச்சி

இப்பயிற்சி உடல் ஆரோக்கியத்துடன் புத்துணர்ச்சி அளிப்பதாகவும், இக்கட்டான சூழ்நிலையில் தங்களை தற்காத்துக் கொள்ளவும், பிறரை காப்பாற்ற இப்பயிற்சி உதவுவதாக மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் தெரிவித்தனர்.

பயிற்றுனர்கள் வேண்டுகோள்

இது போன்ற கோடைகால நீச்சல் பயிற்சி முகாமினை பயனுள்ளதாக மாற்றியமைக்க மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் முன் வர வேண்டும் என பயிற்றுனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி