ஆப்நகரம்

சிவகங்கையில் மிகவும் பழமையான கோயிலில் திருமஞ்சனம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

Samayam Tamil 31 Oct 2021, 11:22 pm
சிவங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ஐப்பசி மாத சிறப்பு திருமஞ்சனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
Samayam Tamil சிவகங்கையில் மிகவும் பழமையான கோயிலில் திருமஞ்சனம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது!


இத் திருக்கோவில் சிறப்பு அம்சமாக இரண்டு பிரதான சன்னதிகளில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் இரு தேவியருடன் தனித்தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.

இரு உற்சவ தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடந்தன. முன்னதாக கோவில் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் நான்கு தேவியர்கள் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகிய தெய்வங்களை எழுந்தருள செய்து சிறப்பு பூசைகள் நடைபெற்றன.

முதல்வர் ஸ்டாலினுக்கு போட்டியாக வந்த பாஜக அண்ணாமலை சிவகங்கையில் நடந்தது என்ன?
தொடர்ந்து திருமஞ்சனம் பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் தேன் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமணத் திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து பெருமாள் தாயாருக்கு சந்தன காப்பு சாற்றி கலசத்தில் உள்ள புனித நீரால் வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகத்தை அர்ச்சகர்கள் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாள் தாயாரை வழிபட்டனர்.

அடுத்த செய்தி