ஆப்நகரம்

அய்யனார்கோயில் காளை சாவு; இறுதி ஊர்வலம் நடத்திய மக்கள்!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே கண்டவராயன்பட்டியில் உள்ள வள்ளநாடு கருப்பர் காடப்பிள்ளை அய்யனார் கோயில் காளை உடல்நலக்குறைவால் இறந்தது. கோயில் காளை இறந்த சம்பவம், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஏராளமான மக்கள் காளைக்கு அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.

Samayam Tamil 22 Sep 2021, 6:04 pm

ஹைலைட்ஸ்:

  • அய்யனார் கோயில் காளை மரணம்
  • காளையின் சாதனையால் பெருமை
  • மக்கள் இறுதி ஊர்வலம் நடத்தினர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே கண்டவராயன் பட்டியில் உள்ள வள்ளநாடு கருப்பர் காடப்பிள்ளை அய்யனார் கோயிலுக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக காளை ஒன்று வாங்கப்பட்டது.
இந்த காளை பல மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி கண்டவராயன்பட்டி கிராமத்திற்கே பெருமை சேர்த்து வந்தது. மஞ்சுவிரட்டு களத்தில் கோபமாக பாய்ந்தாலும் கிராமத்திற்குள் நுழைந்தவுடன் சிறு குழந்தைகளிடமும் மிகவும் அன்பாக பழகி வந்தது.

இதன் காரணமாகவே மரியாதை நிமித்தமாக அனைவரின் வீட்டிலும் இந்த காளைக்கு உணவளித்து உபசரித்து வந்தனர். கடந்த 3 நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த இந்த காளை நேற்று மாலை திடீரென இறந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காளையின் உடல் ஊர் சவுக்கை அருகே பொதுமரியாதைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிராமத்தினர் பலரும் திரண்டு வந்து வஸ்திரம் மற்றும் மாலைகள் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

வேட்பாளரை மிரட்டும் திமுக?; உள்ளாட்சித் தேர்தல் விறுவிறு!

பின்னர் காளையின் உடலை வாகனத்தில் ஏற்றி இறுதி ஊர்வலம் கொண்டு வரப்பட்டு சவுக்கை அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் நாட்டார் நகரத்தார் என பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி