ஆப்நகரம்

மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை- உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு

முள்ளிவாய்க்கல்: ஈழத் தமிழர் இனப்படுகொலை 10-வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், முள்ளிவாய்க்கல் நினைவேந்தலில் பிரதான சுடர் ஏற்றப்பட்டது.

Samayam Tamil 18 May 2019, 1:27 pm

ஹைலைட்ஸ்:

  • கண்ணீருடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஒன்று திரண்ட மக்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சிறுமி ராகினி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் முற்றத்தில் சுடரை ஏற்றும் சிறுமி ராகினி
தமிழீழம் தனிநாடு கோரி யுத்தம் நடத்திய விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையேயான இறுதி யுத்தம் நடைபெற்ற நந்திக்கடலில் ஏராளமானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையேயான இறுதிப்போர் 2009ம் ஆண்டு மே 18ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
தமிழினத்தின் மிகப்பெரிய துயர சம்பவமான ஈழத் தமிழர் இனப்படுகொலையின் 10வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று உலகத் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நந்திக்கடலில் ஏராளமானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தி

இதை முன்னிட்டு, இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் பொது ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. போரில் உறவுகளை இழந்தவர்கள் பலர் இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் பகுதிகளில் ஒன்றுகூடி அவர்களுக்காக மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

குறிப்பாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரின் போது 8 மாதமான பெண் குழந்தை, தாய் இறந்தது தெரியாமல் அவரது மாரில் பால்குடித்த புகைப்படம் வெளியாகி உலகையே உலுக்கியது. ராகினி என்ற பெயர்சூட்டப்பட்ட அந்த குழந்தைக்கு தற்போது 10 வயது ஆகிறது.

மலேசியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுசரிக்கும் தமிழர்கள்

ஒருகையை இழந்த நிலையில், முள்ளிவாய்க்காலில் முதலாவது ஈகைச் சுடரை
சிறுமி ராகினி ஏற்றினார். அப்பகுதியில் அனைத்து மதத்தினரின் பிரதிநிதிகள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திருகோணமலை ஆதினத்தின் தலைவர் மே 18 பிரகடனத்தை வாசித்தார். இலங்கை யுத்தத்தில் உறவுகளை இழந்த பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு முள்ளிவாய்க்காலில் ஈகைச்சுடரேற்றி மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி