ஆப்நகரம்

மாணவர்களுக்காக 600 பேருந்துகள்: போக்குவரத்து சபை அறிவிப்பு!

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்காக 600 பேருந்துகள் இலங்கையில் இயக்கப்படுகின்றன.

Samayam Tamil 25 Nov 2020, 1:08 pm
இலங்கையில் நேற்று மட்டும் இதுவரை 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sri lanka local bus


குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 20,795 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளாகிய 5,743 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகிய 90 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல்: இலங்கைக்கு பாதிப்பு உண்டா?

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பகுதிகளில், மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக சுமார் 600 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்த ஏனைய பகுதிகளில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் வழக்கம் போல் சேவையில் ஈடுபடுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி