ஆப்நகரம்

சரக்கு கப்பலில் பயங்கர தீ... இலங்கை கடல் எல்லையில் நேர்ந்த துயரம்

குவைத்திலிருந்து இந்தியா நோக்கி பயணித்து கொண்டிருந்த சரக்கு கப்பல் இலங்கை கடல் எல்லையில் தீ விபத்துக்குள்ளானது. கப்பலில் பயணித்த பணியாளர்களில் பெரும்பாலோர் பத்திரமாக மீட்கப்பட்டுவிடட நிலையில், தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Samayam Tamil 4 Sep 2020, 7:35 pm
குவைத நாட்டின் மினா அல் அஹ்மாதி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி புறப்பட்ட சரக்கு கப்பல், இந்தியாவின் பாரதீப் துறைமுகத்தை செப்டம்பர் 5 ஆம் தேதி அடையும் இலக்குடன் பயணம் மேற்கொண்டிருந்தது.
Samayam Tamil ship fire


கிழக்கு இலங்கை கடல் பகுதியின் 38 கடல் மைல் தொலைவில் கப்பல் வந்து கொண்டிருந்தபோது அந்த கப்பலில் தீ பற்றி எரியத் தொடங்கியதாக தெரிகிறது. கப்பலின் எஞ்சின் பகுதியில் முதலில் தீ பற்றி எரியத்தொடங்கியதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர ஊழியர்கள் முயற்சித்தாகவும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதையடுத்து ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய கடற்படை முகாம்களிலிருந்து இரண்டு கப்பல்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன.

இலங்கை சுற்றுலாத் துறையை வலுப்படுத்த மகிந்த ஆலோசனை!

அத்துடன், சரக்கு கப்பலில் ஏற்பட்ட மிகப்பெரிய தீயை அணைக்க இந்தியாவிடம் இலங்கை உதவி கோரியது. அதன்படி சம்பவ பகுதிக்கு விரைந்த இந்திய கடலோர காவல் படை, கப்பலில் இருந்த 23 ஊழியர்களில் 19 பேரை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தீ விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளதும், ஒருவர் காணவில்லை எனவும் தெரிகிறது.


MT NEW DIAMOND என்ற பெயர் கொண்ட அந்த கப்பலில் 2 லட்சம் டன் அளவிலான சரக்குகளும், குவைத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பதாகவும் தகவல்கள் தெரிகின்றன.

அடுத்த செய்தி