ஆப்நகரம்

வெளியானது புதிய 20 ரூபாய் நாணயம்; அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய நாணயத்தின் சிறப்புகள் குறித்து இங்கே விரிவாக காணலாம்.

Samayam Tamil 1 Jan 2021, 3:02 pm
இலங்கையில் உள்ள Central Bank of Sri Lanka எனப்படும் இலங்கை மத்திய வங்கி கடந்த 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டது. இதன் 70ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி புதிய 20 ரூபாய் நாணயம் நேற்று (டிசம்பர் 31) வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஒருபுறம் மத்திய வங்கி கட்டடம் இடம்பெற்றுள்ளது. மேலும் 70 ஆண்டுகளைக் குறிக்கும் வண்ணம் 1950-2020 என்று குறிப்பிட்டு 70 என்ற எண்ணும் காணப்படுகிறது. இதையடுத்து இலங்கை மத்திய வங்கி என்ற பெயர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இருக்கிறது.
Samayam Tamil CBSL 20 Rupee Coin


நாணயத்தின் மறுபுறம் 20 என்ற எண் இடம்பெற்றிருக்கிறது. இலங்கை என்ற பெயரும், இருபது ரூபாய் என்ற பெயரும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளில் காணப்படுகிறது. மேலும் 2020 என்ற ஆண்டும் இருக்கிறது. அலுமினிய வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ள இந்த நாணயம் 7 முனைகளைக் கொண்டுள்ளது.

ஊரடங்கில் அடுத்தகட்ட தளர்வு: அரசு அறிவிப்பு!
இதன் விட்டம் 28 மில்லிமீட்டராகவும், தடிமன் 2 மில்லிமீட்டராகவும் இருக்கிறது. இதன் முதல் நாணயத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச -விடம் மத்திய வங்கி கவர்னர் டபுள்யூ.டி லக்‌ஷ்மண் வழங்கினார். இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படாது. நினைவுச் சின்னம் போன்று விற்பனைக்கு வரவுள்ளது.

இதற்காக 3,000 புதிய 20 ரூபாய் நாணயங்கள் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் ஒவ்வொன்றின் விலை 1,300 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் பிரத்யேக பெட்டகம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படவுள்ளன.

மாஸ்டருக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
இதை கொழும்புவின் எகானமிக் ஹிஸ்டரி மியூசியத்தில் உள்ள விற்பனைக் கவுன்ட்டரில் வாங்கிக் கொள்ளலாம். மேலும் அனுராதபுரம், மாடாலே, மாடாரா, திரிகோணமலை, கிளிநொச்சி, நுவாரா எலியா ஆகிய இடங்களில் உள்ள மத்திய வங்கிக் கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.

அடுத்த செய்தி