ஆப்நகரம்

ஒருவருக்கு கொரோனா... அனைத்து நோயாளிகளும் வெளியேற்றம்!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிற அனைத்து நோயாளிகளும் வெளியேற்றப்பட்டனர்.

Samayam Tamil 9 Oct 2020, 7:40 pm
நீர்கொழும்பு பழைய சிலாபம் வீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil corona


இதனையடுத்து மருத்துவமனை மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையை மூடுவதற்கு நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீர்கொழும்பு கட்டுவபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் அதே பகுதியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல்: ஜனாதிபதி விடுத்த சேதி!

அதேசமயம், நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வுருகிறது.

இதனிடையே, நீர்கொழும்பில் இதுவரை ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி