ஆப்நகரம்

நாடு திரும்ப காசு இல்லை: இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்!!

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வியாபாரம் செய்ய சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பொதுமுடக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

Samayam Tamil 1 Jun 2020, 12:01 am
சிவகாசி, ராஜபாளையம், சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 1,350 தமிழர்கள், கடந்த ஆண்டு இறுதியில் துணி வியாபாரத்திற்காக இலங்கைக்கு சென்றனர்.
Samayam Tamil srilaka


சில மாதங்களுக்கு முன் அங்கு, கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அவர்கள் அனைவரும் 70 நாட்களுக்கும் மேலாக அங்கு சாப்பாடு இல்லாமல், விசா காலாவதியாகி இந்தியா வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

விசாவிற்கு 10 ஆயிரம் ரூபாயும், கப்பல் பயணக் கட்டணமாக 8 ஆயிரம் ரூபாயும் செலுத்தினால்தான் அவர்கள் இந்தியா திரும்ப முடியும் என்ற நிலை உள்ளது.

இலங்கையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

இவர்களின் வருமானத்தை நம்பி உள்ள குடும்பத்தினரிடமும் பணம் இல்லாததால், இலங்கையில் சிக்கித் தவிக்கும் அவர்களால் பணம் கட்ட முடியாததால் நாடு திரும்புவது அவர்களுக்கு கேள்விக்குறியாகி உள்ளது.

மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் தங்களுக்கு விசா மற்றும் கப்பல் பயணத்துக்கு நிதியுதவி அளித்து உதவ வேண்டும் என்று இலங்கையில் இருந்து அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடி நாளை (ஜூன் 1) பயணிகள் கப்பல் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி