ஆப்நகரம்

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த பொது முடக்கம்!

இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Oct 2020, 11:10 pm
கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் இன்று (29) நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதால், ரயில் போக்குவரத்திற்கான கால அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Samayam Tamil lockdown


திருத்தப்பட்ட கால அட்டவணை தொடர்பில் ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்நிலையில் ரம்புக்கனை தொடக்கம் கொழும்பு கோட்டை வரையும், பெலியத்தை, காலி, அளுத்கம மற்றும் களுத்துறை தொடக்கம் மருதானை வரையும் அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையும், சிலாபம் முதல் கொழும்பு கோட்டை வரையும் நாளை முதல் எதிர்வரும் ஒன்றாம் தேதி வரை எவ்வித ரயில்களும் சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி? அமைச்சர் அறிவிப்பு!

எனினும், உயர்தரப் பரீட்சையில் தோற்ற பரீட்சார்த்திகளுக்கான ரயில்கள் உரிய நேரத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறையிலிருந்து தெற்கு அதிவேக வீதியூடாக கொழும்பிற்குள் பிரவேசிக்க வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த மட்டுப்படுத்தல் நடவடிக்கை பொருந்தாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி