ஆப்நகரம்

ஊருக்குள் வரும் காட்டு யானைகள்: புதிய திட்டத்தை உருவாக்க கோட்டபய ராஜபக்சே உத்தரவு!

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை உருவாக்க அதிபர் கோட்டபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார்

Samayam Tamil 28 Aug 2020, 4:41 pm
காட்டு யானைகள் இலங்கை கிராமங்களுக்கு வரும் பிரச்சினையை சுமார் 40 ஆண்டுகாலமாக மக்கள் சந்தித்து வருகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தினாலும் இப்பிரச்சினைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
Samayam Tamil கோட்டபய ராஜபக்சே
கோட்டபய ராஜபக்சே


2019ஆம் ஆண்டு மட்டும் யானைகள் கிராமங்களுக்கும் உட்புகுந்ததினால் 122 பேர் உயிரிழந்துள்ளனர். 407 காட்டு யானைகள் இறந்துள்ளன. நடப்பாண்டில் மட்டும் 62 பேரும், 200 யானைகளும் இறந்துள்ளன.

இந்த நிலையில், மனிதர்களையும் யானைகளையும் பாதுகாக்கக்கூடிய உடனடி மற்றும் நிலையான தீர்வை ஏற்படுத்த வேண்டியது முக்கியம் என குறிப்பிட்டுள்ள அதிபர் கோட்டபய ராஜபக்சே, காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையிலும், யானைகளை காட்டுக்கே திருப்பி அனுப்பக்கூடிய வகையிலும் இரண்டாண்டுகளுக்கு நிலையான தீர்வு ஒன்றை ஏற்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

'முதலில் இந்தியா' என்பதே இனி இலங்கையின் வெளியுறவுக் கொள்கையாம்!!

வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகைகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு திட்டங்கள் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி அமைச்சகத்த்ன் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கோட்டபய ராஜபக்சே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், நீண்டகாலமாக நிலவி வருகின்ற பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு அதிகாரிகளிடம் தனது அதிருப்தியையும் தெரிவித்த கோட்டபய ராஜபக்சே, காட்டு யானைகள் கிராமங்களுக்குள் ஊடுறுவதை தடுத்து மனித வாழ்வையும் பயிர் நிலங்களையும் பாதுகாப்பதற்காக நிலையான தீர்வு காண குழு ஒன்றையும் அமைத்துள்ளார்.

அடுத்த செய்தி