ஆப்நகரம்

இலங்கை விமான நிலையத்தில் 9வது குண்டு வெடிப்பு திட்டம் முறியடிப்பு!

இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள விமான நிலையத்தின் அருகே மற்றொரு பயங்கர வெடிகுண்டு கண்டெடிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக அதிகாரிகள் அதனை செயலிழக்கச் செய்துவிட்டனர்.

Samayam Tamil 22 Apr 2019, 3:10 pm
இலங்கையின் கொழும்பு விமான நிலையம் அருகே திங்கட்கிழமை காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.
Samayam Tamil sri_07399


ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற 8 தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் குறைந்தது 290 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலின் எதிரொலியாக அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள விமான நிலையத்தின் அருகே மற்றொரு பயங்கர வெடிகுண்டு கண்டெடிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக அதிகாரிகள் அதனை செயலிழக்கச் செய்துவிட்டனர்.

அவசர நிலை பிரகடனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கொழும்பு விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல முடியாமல் விமான நிலையத்திலே தங்கியுள்ளனர். இச்சூழலில் விமான நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு சரியான நேரத்தில் கண்டுபிடித்து செயலிழக்கச் வைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி