ஆப்நகரம்

'முதலில் இந்தியா' என்பதே இனி இலங்கையின் வெளியுறவுக் கொள்கையாம்!!

இலங்கையின் வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்நாட்டின் புதிய வெளியுறவு செயலராக பொறுப்பேற்றுள்ள ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்..

Samayam Tamil 27 Aug 2020, 5:48 pm
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார். அவரது தலைமையில் அமைந்துள்ள புதிய அரசின் வெளியுறவுத் துறை செயலாளராக இலங்கை கடற்படை முன்னாள் தளபதி ஜெயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil india and srilanka


பதவியேற்புக்கு பின், ஜெயநாத் கொலம்பகே செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கை அரசின் வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 'முதலில் இந்தியா' என்பதே இலங்கையின் வெளியுறவு கொள்கையாகும். இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயலையும் இலங்கை மேற்கொள்ளாது. இதே போன்று, இலங்கை மண்ணில் பிற நாட்டுக்கு எதிரான, குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான எந்த காரியத்தையும் அனுமதிக்கமாட்டோம்.

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்களா? விக்னேஸ்வரனுக்கு சவால் விடுக்கும் உதய கம்மன்பில!

இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தை முதலில் இந்தியாவுக்கு குத்தகைக்கு தரத்தான் திட்டமிட்டோம். ஆனால், அதனை இந்தியா ஏற்காததால்தான் சீனாவுக்கு அளித்தோம். அந்த துறைமுகத்தை சீனா வணிக நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும். ராணுவ செயல்பாடுகளுக்கு பயன்படுத்தாது.

கொழும்பு துறைமுகத்தை இயக்குவது தொடர்பாக இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை மீறி நிச்சயம் செயல்படுத்துவோம் என்று ஜெயநாத் கொலம்பகே தெரிிவித்துள்ளார்.

அடுத்த செய்தி