ஆப்நகரம்

எல்லாத்துக்கும் உங்க மீனவர்கள் தான் காரணம்; மோடியிடம் நஷ்ட ஈடு கேட்கும் இலங்கை அமைச்சர்!

இந்திய மீனவர்களால் அழிக்கப்படும் இலங்கையின் கடல் வளங்களுக்கு நஷ்ட ஈடு வேண்டும் என்று அந்நாட்டு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 20 Feb 2020, 11:45 am
இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது இந்தியாவிற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம்.
Samayam Tamil Douglas Devananda


இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கையின் கடற்பகுதியில் நுழைந்து மீன் பிடிப்பதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், மீனவர்களும் தாக்கப்படுகின்றனர்.

எனவே தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இருநாட்டு அரசுகளும் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படாததால் மீனவர்கள் தான் நடுவில் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர்.

ஆபத்து - கரன்சி நோட்டுகள் மூலமும் பரவும் கொரோனா; சீன அரசு தீட்டிய அதிரடி திட்டம்!

இந்நிலையில் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நீர்வளம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயல்பாடுகளால் இலங்கையின் கடல் வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இதற்கு இந்திய அரசு நஷ்ட ஈடு அளிக்க வேண்டும். இருநாட்டு கடல் வழித் தடத்தில் சில சட்டவிரோத விஷயங்களும் நடைபெறுகின்றன. இதுபற்றி இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் தெரியப்படுத்தி உள்ளோம்.

அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சமீபத்தில் இந்திய மீனவர்கள் 11 பேர் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்டனர். இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அமெரிக்க பெடரல் நீதிமன்ற தலைமை நீதிபதியான தமிழர்

அவர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வாறு அவர்கள் குற்றம்சாட்ட இயலாது. ஏனெனில் தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்தால், அவர்களின் படகுகளை அரசுடமை ஆக்குவது தொடர்பாக 2019ல் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளோம். அதன்படியே செயல்பட்டு வருகிறோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி