ஆப்நகரம்

நிவர் புயல்: இலங்கைக்கு பாதிப்பு உண்டா?

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக இலங்கை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Nov 2020, 3:21 pm
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று (நவம்பர் 23) நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று (நவம்பர் 24) இது மேலும் வலுவடைந்து புயலாக (நிவர்) தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ளது.
Samayam Tamil nivar cyclone


அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவம்பர் 25ஆம் தேதி) மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்க கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வரை காற்று வீசலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளிகள் மீண்டும் திறப்பு: முக்கிய அறிவுறுத்தல்!

அத்துடன் வட பிராந்தியம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன், மணிக்கு 100 கிலோ மீட்டர் வரையான வேகத்தில் காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் விடுவிக்கப்படும் தனிமைப்படுத்தபட்ட பகுதிகள்!

இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி