ஆப்நகரம்

மீண்டும் பொது முடக்கமா? ஜனாதிபதி சொல்வது இதுதான்!

கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கான தீர்வை கண்டறியும் வரை பொது முடக்கம் அமல்படுத்த முடியாது என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Nov 2020, 11:18 am
இலங்கையில் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
Samayam Tamil lockdown


பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க மக்களை தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரதிநிதிகளின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் என்று டிஜிட்டல் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொரோனா: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒர்க் ஃப்ரம் ஹோம்!

மேலும் அவர் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மட்டும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் சமமாக கவனத்திற்கொண்டு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாலே பாதிப்புகளை குறைக்க முடிந்தது, அத்துடன் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க முடிந்தது என்று கூறுகின்றனர்.

அடுத்த செய்தி