ஆப்நகரம்

விடுதலைப் புலிகள் அரசியல் ஆலோசகர் கொலை முயற்சி வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு!

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

Samayam Tamil 23 Oct 2020, 5:50 pm
கடந்த 1985ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான பாலசிங்கத்தின் சென்னை வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இதில் யாரும் காயமடையவில்லை. இருப்பினும், பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்றதாக வி.கே.டி.பாலன், கந்தசாமி, பவானி உள்ளிட்ட 7 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சன், மணைவை தம்பி ஆகியோர் உயிரிழந்து விட்டனர். ராதாகிருஷ்ணன் என்பவர் அப்ருவராக மாறிவிட்டார். கந்தசாமி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். வி.கே.டி.பாலன் மட்டும் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், 30 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாததாலும், பாலசிங்கம் உள்ளிட முக்கிய நபர்கள் உயிரிழந்து விட்டதாலும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி வி.கே.டி.பாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பயங்கரவாதத்தின் மிச்சங்கள்: விடுதலைப் புலிகளை சாடிய ராஜபக்சே - இலங்கை மேல்முறையிடு!

இந்த மனுவானது நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை ரத்து செய்ய முடியாது என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பாலசிங்கம் இறந்துவிட்டார் என்பதற்காக இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும், உயிருடன் இருக்கும் பிற சாட்சிகள் மூலமாக வழக்கை நிரூபிக்க முடியும் எனவும் தெரிவித்து வழககி ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து வி.கே.டி. பாலன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி