ஆப்நகரம்

ரூ.1400 கோடி செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தை மூட முடிவு!

பயணிகள் வரவேற்பு இல்லாத காரணத்தால் இலங்கை மட்டாலா சர்வதேச விமான நிலையத்தை மூடும் நிலை உருவாகியுள்ளது.

Samayam Tamil 10 Jun 2018, 1:42 pm
பயணிகள் வரவேற்பு இல்லாத காரணத்தால் இலங்கை மட்டாலா சர்வதேச விமான நிலையத்தை மூடும் நிலை உருவாகியுள்ளது.
Samayam Tamil sri-lanka-airport
ரூ.1400 கோடி செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தை மூட முடிவு!


இலங்கையில் கடந்த 2013ஆம் ஆண்டு, ராஜபக்சே அதிபராக இருந்தபோது மட்டாலா என்ற இடத்தில் சர்வதேச விமான நிலையம் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டது. கொழும்பில் இருந்து 250 கி.மீட்டர் தூரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் ராஜபக்சேவின் சொந்த மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது.

சுமார் ரூ.1400 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தவிமான நிலையம், தொடங்கப்பட்டதில் இருந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. விமான நிலையம் வனப்பகுதியில் அமைந்திருப்பதால் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானது.

மேலும் பயணிகள் வரத்தும் இல்லாத காரணத்தால் விமான நிறுவனங்கள் கடுமையான நஷ்டங்களை சந்தித்தன. இதனால் துபாய் நிறுவனம் தனது விமான போக்குவரத்தை நிறுத்தியது. இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஆண்டுக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த 2015ஆம் ஆண்டுடன் தனது சேவையை நிறுத்தியது.

இதனையடுத்து ஒரே ஒரு விமானம் மட்டும் இங்கு தினமும் வந்த நிலையில் இந்த விமான போக்குவரத்தும் நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டது.

இதனால் இலங்கையில் 2-வது பெரிய சர்வதேச விமான நிலையமாக உருவாக்கப்பட்ட மட்டாலா விமான நிலையம் மூடும் நிலை உருவாகியுள்ளது.

அடுத்த செய்தி