ஆப்நகரம்

மீண்டும் ஒலித்த தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்!

திலீபன் நினைவேந்தலில் கலந்துகொண்ட சிவாஜி லிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 17 Sep 2020, 1:33 pm
திலீபனின் நினைவேந்தலில் கலந்துகொண்டுவிட்டு வரும் வேளையில் கோப்பாய் காவல்துறையினர் தன்னை கைது செய்ததாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sivajilingam


சிவாஜி லிங்கம் ஒன்றரை மணி நேரம் காவல்துறையின் காவலில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் 2 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் வெளிவந்துள்ளார். கடுமையாக எச்சரித்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

“அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் பயங்கரவாதிகளைவிட நான் மோசமானவன் என்றும், என்னை திருத்தவே முடியாது என்றும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக நினைவேந்தலின் போது பதாகைகளில் எழுதியிருந்த வாசகங்களே இவர்களின் கோபத்திற்கு காரணம்.

ஓட்டுநர் உரிம விண்ணப்பதாரர்களுக்கு இனி சிறுநீர் பரிசோதனை கட்டாயம்!!

நீதிமன்றத்திலும் கூட தமிழர்களின் தாயகம் தமிழீழ தாயகம் என கூறினேன். இதனை நாட்டை பிளவுபடுத்தும் செயல்பாடு என கூறினார்கள்” என சிவாஜி லிங்கம் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி