ஆப்நகரம்

கட்சித் தலைவருக்கு உடல்நலக் குறைவு... எம்.பி.க்கள் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை தொகுதி எம்.பி.யுமான இரா. சம்பந்தனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Aug 2020, 7:12 pm
இலங்கையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பின், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளை தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
Samayam Tamil tna leader


ஆனால், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், கொறடா ஆகிய பதவிகள் குறித்த இறுதித் தீர்மானத்தின் மீது எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் பண்ணமாட்டேன்: ராஜபக்சே

அதாவது இந்தப் பதவிகளுக்கு புதியவர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படுவதாக இருந்தது என்று அவர் கூறினார்.

இலங்கையில் சிறுபான்மை தமிழர்களின் குரலாக ஒலிக்கும் நோக்கில், பல்வேறு தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் அரசியல் அமைபபு கடந்த 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அடுத்த செய்தி