ஆப்நகரம்

முள்ளிவாய்க்காலில் இன்று 9வது ஆண்டு நினைவேந்தல் அனுசரிப்பு!

இலங்கை அரசுப் படைகளால் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடத்தப்படுகிறது.

Samayam Tamil 18 May 2018, 11:32 am
இலங்கை அரசுப் படைகளால் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடத்தப்படுகிறது.
Samayam Tamil mulli
முள்ளிவாய்க்காலில் இன்று 9வது ஆண்டு நினைவேந்தல் அனுசரிப்பு!


கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உச்சகட்ட போரின் போது, அந்நாட்டு அரசால் லட்சகணக்கான தமிழர்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். போர் நிறைவடைந்து 9 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் அதனால் ஏற்பட்ட வடுகள் இலங்கை தமிழர்கள் மனங்களில் இன்னும் நீங்கவில்லை.

இந்த நிலையில் போரின் போது கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களுக்காக ஒருவார கால நினைவு அனுசரிப்பு நிகழ்வை கடந்தாண்டு இலங்கையில் உள்ள சில தமிழ் அமைப்புகள் தொடங்கின. இனப்படுகொலைக்கு எதிரான நினைவேந்தல் வாரம் என்று இதனை அந்த அமைப்புகள் அறிவித்தன.

இலங்கை அரசின் இனஒழிப்பு நடவடிக்கையால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் நினைவாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.அந்தவகையில் இலங்கை அரசுப் படைகளால் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடத்தப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் இடத்தில், இன்று(மே 18) காலை 11 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. உறவுகளைப் பறிகொடுத்த இலங்கைத் தமிழர்கள் ஏராளமானோர் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு போரில் உயிர்நீத்த இலங்கை தமிழ் மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்