ஆப்நகரம்

இலங்கையில் 8 இடங்களில் குண்டு வெடிப்பு: 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்

இலங்கையில் அடுத்தடுத்து 8 பகுதிகளில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தது. இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். இதில் பெருவாரியான தமிழா்கள் உயிாிழந்திருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Apr 2019, 3:24 pm
இலங்கையின் தேவாலயம், நட்சத்திர விடுதி உள்ளிட்ட 8 பகுதிகளில் தொடா் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில் அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Srilanka Blast


ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இந்நிலையில், கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியாா் தேவாலயத்திலும், நீா்கொழும்புவில் உள்ள மற்றொரு தேவாலயத்திலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன. அதே போன்று நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 6 பகுதிகளில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த விபத்தில் 150க்கும் அதிகமானோா் உயிாிழந்திருந்த நிலையில் அடுத்தடுத்து மேலும் இரு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.



இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோா் உயிாிழந்திருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோா் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.


இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தற்போது வரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்தியா்கள் உதவி தேவைப்படும் பட்சத்தில் தொடா்புகொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்பட உலகம் முழுவதும் உள்ள தலைவா்கள் கண்டனம் தொிவித்து வருகின்றனா்.

குண்டுவெடிப்பு சம்பவம் கொழும்பு, மட்டக்கலப்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. உயிாிழந்தவா்களில் பெருவாரியானவா்கள் தமிழா்கள் என்றும், வெளிநாடுகளைச் சோ்ந்த 35 போ் இதில் இறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தொடா் குண்டுவெடிப்பைத் தொடா்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த செய்தி