ஆப்நகரம்

விடுதலை புலிகளை தாக்க ராக்கெட் லாஞ்சர்களை அனுப்பிய பாகிஸ்தான்!

விடுதலை புலிகள் யாழ்பாணத்தை கைபற்ற முடியாமல் போனதற்கு பாகிஸ்தான் செய்த உதவியே காரணம் என்று இலங்கை வெளிவிவகாரங்கள் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்

Samayam Tamil 27 Aug 2020, 3:48 pm
இலங்கையில் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த காலத்தில் நடைபெற்ற இறுதி போரில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து பகுதிகளையும் இலங்கைப் படை கைப்பற்றியது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி போர் முடிவுக்கு வந்ததாகவும், அதன் தலைவர் பிராபாகரன் உயிரிழந்து விட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.
Samayam Tamil ஜெயநாத் கொலம்பகே
ஜெயநாத் கொலம்பகே


இந்த நிலையில், இலங்கையின் புதிய வெளிவிவகார செயலாளரும், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியுமான அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர பிரச்சினைகளைக் கொண்டுள்ள நாடுகள். ஆனால், அந்த இரண்டு நாடுகளும் நமது நண்பர்கள். நெருக்கடி காலங்களில் அந்த இரண்டு நாடுகளும் நமக்கு உதவியுள்ளன என்றார்.

மேலும், யுத்த காலத்தில் கிட்டத்தட்ட வடக்கை இழந்து விட்டதாக தெரிவித்த ஜெயநாத் கொலம்பகே, அந்த சமயத்தில் பாகிஸ்தான் பல்குழல் ராக்கெட் லாஞ்சர்களை அனுப்பி வைத்தது. அதன் மூலமே விடுதலை புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முடியாமல் தடுக்க முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்களா? விக்னேஸ்வரனுக்கு சவால் விடுக்கும் உதய கம்மன்பில!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் மிகவும் முக்கியமான நாடுகள். ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினருக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த இடமளிக்ககூடாது. முழு உலகுடனும் நல்லுறவு வைத்திருப்பது அவசியம் என்றும் ஜெயநாத் கொலம்பகே அப்போது தெரிவித்தார்.

அடுத்த செய்தி