ஆப்நகரம்

கொரோனா தொற்றை 20 நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம்!

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இலங்கை சுகாதார அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

Samayam Tamil 6 Nov 2020, 8:05 pm
இலங்கையில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு நோய்ப் பரவுவதை தடுப்பதற்கும், நோயாளிகளை அடையாளம் காணும் பிசிஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் கோட்டபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நிலையில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இலங்கை சுகாதார அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த முறை மூலம் பிசிஆர் சோதனையை விட விரைவாக கொரோனா தொற்றை கண்டறிய முடியும் என்று சுகாதார அமைச்சகத்தின் ரசாயனகூட சேவைப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு லட்சம் வைரஸ் பரிசோதனைக் கருவிகளை கொரியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாக தெரிவித்த அவர், அடுத்த வாரம் 8 லட்சம் வைரஸ் பரிசோதனைக் கருவிகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளில் சுகாதர அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பொது முடக்கமா? ஜனாதிபதி சொல்வது இதுதான்!

முதல் கட்டமாக இந்த கருவிகள் மூலம் முதலீட்டுச் சபையிலும், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தொழிற்சாலையிலும் பணிபுரியும் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பரிசோதிக்கப்படவுள்ளனர் என்ற தகவலையும் அப்போது டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.

அடுத்த செய்தி