ஆப்நகரம்

பிரிட்டன் தூதரகத்தில் மனு: அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவு!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவு தெரிவித்து பிரிட்டன் தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Samayam Tamil 13 Mar 2021, 3:32 pm
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil srilankan tamil


சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பிரித்தானிய தூதரகத்தில், தமிழீழ விடுதலைக்கான இளையோர் கூட்டமைப்பு மற்றும் அனைத்துலக தமிழர் செயலகம் சார்பில் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உதயமானது பாரதிய ஜனதா கட்சி!
பிரித்தானிய அரசாங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் சாகும் வரையிலான தனது உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செயற்பாட்டாளர் அம்பிகை செல்வகுமாரின் போராட்டம் இன்று (13.03.2021) 15ஆவது நாளை கடந்துள்ளது.

இந்நிலையில் அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கையை பிரித்தானிய அரசு செவிமடுத்து, உடனடியாக அதனை தீர்மானமாக கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழீழ விடுதலைக்கான இளையோர் கூட்டமைப்பு மற்றும் அனைத்துலக தமிழர் செயலகம் சார்பில் மனு கையளிக்கப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பிரித்தானிய துாதரகத்தில் இந்த கோரிக்கை மனு கையளிக்கப்பட்டது.
மார்ச் மாத தொடக்கத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுபடும் பகுதிகள்!
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்புநாடுகளுக்கும் தமிழர் தீர்மான முன்மொழிவை வழங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைக்கான இளையோர் கூட்டமைப்பு மற்றும் அனைத்துலக தமிழர் செயலகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி