ஆப்நகரம்

பெட்ரோல் 470 ரூபாய்; டீசல் 460 ரூபாய் - நாட்டு மக்கள் அதிர்ச்சி!

எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் இலங்கை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 27 Jun 2022, 9:09 pm

ஹைலைட்ஸ்:

  • இலங்கையில் எரிபொருள்களின் விலை மீண்டும் உயர்வு
  • பெட்ரோல் லிட்டர் ரூ.470
  • டீசல் ரூ.460
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil எரிபொருள் விலை உயர்வு
இலங்கையில் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை உயர்வு
நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு அரசிடம் அந்நிய செலாவணி கையிருப்பும் குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்கும் வகையில், அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாத இக்கட்டான நிலையில் இலங்கை அரசு உள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, இந்தியா தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. முக்கியமாக எரிப்பொருள் பற்றாக்குறையை போக்க, இந்தியா இலங்கைக்கு அவ்வபோது உதவி செய்து வருகிறது. கடந்த வாரமும் பெட்ரோல், டீசலை கப்பல் மூலம் இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைத்தது.

இருப்பினும் எரிப்பொருள்களுக்கு அங்கு நிலவும் கடும் பற்றாக்குறையின் காரணமாக, உலக நாடுகள் அளிக்கும் எரிப்பொருள்கள் யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல்தான் உள்ளது.

Aiadmk New Treasurer: அதிமுகவின் பொருளாளர் யார்? - மோதலுக்கு தயாராகும் இரண்டு சீனியர்கள்!
இதனை மெய்ப்பிக்கும் வகையில், பெட்ரோல் லிட்டருக்கு 50 ரூபாயும், டீசல் 60 ரூபாயும் உயர்த்தப்படுவதாக இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு பிறகு மூன்றாவது முறையாக அங்கு எரிப்பொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 470 ரூபாயாகவும், டீசல் 460 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

இருப்பினும் அங்கு எரிப்பொருளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருவதால், பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு எரிபொருள் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி