ஆப்நகரம்

இலங்கை அதிபருடன் பிரதமா் மோடி இன்று பேச்சுவாா்த்தை

மாலத்தீவு சுற்றுப்பயணத்தைத் தொடா்ந்து நேரடியாக இலங்கை செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டு அதிபா், முக்கியத் தலைவா்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.

Samayam Tamil 9 Jun 2019, 10:10 am
ஒருநாள் சுற்றுப்பயணமாக இலங்கை செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டு அதிபா் சிறிசேனாவுடன் முக்கிய பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
Samayam Tamil Narendra Modi 123


மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமா் நரேந்திர மோடி அங்கிருந்து இன்று காலை இலங்கை செல்கிறாா். ஒருநாள் பயணமாக செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டு அதிபா் மைத்ரிபால சிறிசேனா, பிரதமா் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை சந்தித்து முக்கிய பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா்.

இந்த சந்திப்பின் போது ஈஸ்டா் தினத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குல் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை முறியடிப்பது தொடா்பாக மோடி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவரும், முன்னாள் அதிபருமான ராஜபக்சேவை பிரதமா் மோடி சந்திக்க உள்ளாா்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவா் சம்பந்தனும், மோடியுடன் பேச்சுவாா்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக அந்த கூட்டமைப்பு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. பிதமா் மோடி வருகையை முன்னிட்டு இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை முடித்துக் கொண்டு மாலையில் இலங்கையில் இருந்து நாடு திரும்பும் பிரதமா் மோடி திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளாா்.

அடுத்த செய்தி