ஆப்நகரம்

கொரோனாவை விட அதிக உயிர்பலி: இலங்கையில் அதிகரிக்கும் எலி காய்ச்சல்!

இலங்கையில் எலி காய்ச்சல் வேகமாக பரவிவருவதாக அந்நாட்டு தொற்று நோய்ப் பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

Samayam Tamil 24 Aug 2020, 3:25 pm
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி மக்களை வதைத்து வரும் நிலையில் இலங்கையில் எலி காய்ச்சல் அதிகரித்துள்ளது.
Samayam Tamil rat fever


இந்த ஆண்டு மட்டும் இலங்கையில் 4 ஆயிரத்து 554 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 37 பேர் இந்த காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை தொற்றுநோய் பிரிவு மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இரத்தினபுரி மாவட்டம் எலி காய்ச்சலுக்கு அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு மட்டும் 1146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இ பாஸ் ரத்து: அமைச்சர் சொல்வது இதுதான்!

மொனராகலை மாவட்டத்தில் மட்டும் இதுவரை எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் ஒருவர்கூட அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு, பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. அண்டை நாடான இந்தியாவில் குறிப்பாக அருகில் உள்ள தமிழ்நாட்டில் மிக அதிக பாதிப்பு பதிவாகிவரும் போதும் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 12 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஆனால் எலி காய்ச்சலுக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த செய்தி