ஆப்நகரம்

இலங்கை: மைத்திரி பால சிறிசேனவை கைது செய்ய கோரிக்கை?

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவை கைது செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 21 Sep 2020, 2:55 pm
ஈஸ்டர் அன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக பொறுப்புகூறவேண்டிய பிரதான நபர் என்ற வகையில் அப்போது அதிபராக பதவி வகித்த மைத்திரி பால சிறிசேனவை கைது செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Samayam Tamil srilanka


சமூகவலைதளங்கள் மூலம் இந்த கோரிக்கையை இலங்கை அரசியல் தலைவர்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார, ஈஸ்டர் தின வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

கட்டட விபத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு: கண்டியில் சோகம்!

இந்நிலையில் அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தாக்குதல் தொடர்பான பொறுப்பை ஏற்று போலீஸ் மா அதிபர் பதவியிலிருந்து விலகுமாறு முன்னாள் ஜனாதிபதி பூஜித் ஜயசுந்தரவுக்கு அறிவித்திருந்ந்தார் எனவும் ஹேமசிறி பெர்னாண்டோ கூறியிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கிய இந்த சாட்சியம் காரணமாக சிறிசேன பெரும் சிக்கலில் உள்ளதாக இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்கு போறீங்களா? முக்கிய உத்தரவு!

இருப்பினும் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்த விஷயங்களை மறுத்து மைத்திரி பால சிறிசேன அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி