ஆப்நகரம்

இலங்கை மின்சாரத் துறை துரித வளர்ச்சிக்கு ரஷ்யா ஒத்துழைப்பு!

இலங்கை மின்சார துறையின் துரித வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது

Samayam Tamil 13 Oct 2020, 3:57 pm
இலங்கை மின்சாரத் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரிமதேரி ஆகியோர் இடையே நடைபெற்ற அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையின் போது, இலங்கை மின்சாரதுறையின் துரித அபிவிருத்திக்காக ரஷ்ய அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய சகல ஒத்துழைப்பும் வழங்குவதற்கு தமது நாட்டு அரசாங்கம் தயாராகவுள்ளதாக யூரிமதேரி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil டலஸ் அழகப்பெரும (இடது), யூரிமதேரி (வலது)
டலஸ் அழகப்பெரும (இடது), யூரிமதேரி (வலது)


மேலும் அவர் கூறுகையில், ரஷ்ய நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் நீன்டகாலமாக இருக்கும் நல்லுறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றை மென்மேலும் பலப்படுத்துவதற்காக வழங்கக்கூடிய ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சாரதுறையின் வளர்சிக்காக அணுசக்தி தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொடுப்பதற்கான கலந்துறையாடல்கள் ஏற்கனவே நடைபெற்றதோடு, ரஷ்ய நாட்டு அணுசக்தி ஆணைக்குழு மூலம் இலங்கை மின்சாரத்துறைக்கு தேவையான பயிற்சி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு தமது நாடு தயாராகிவுள்ளது என்றும் பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

தொலைப்பேசி வாயிலாக அதிபர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்!

திடமான வளர்ச்சி நோக்கங்களுக்காக செயல்படும் தற்போதைய அரசாங்கம் இலங்கை மின்சாரதுறையில் மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், மீள் பிரப்பாக்கசக்தினூடாக மின்சார உற்பத்தியின் தேவையையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இலங்கை மின்சாரத் துறையின் அபிவிருத்திற்காக ஒத்துழைப்பு வழங்குவதற்காக முன்வந்தமை தொடர்பாக தமது நன்றியினையும் அப்போது தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, ரஷ்ய தூதுவர் அலுவலகத்தின் மூன்றாவதுசெயலாளர் ஒலேக் ருட்னெவ்வும் கலந்து கொண்டார்.

அடுத்த செய்தி