ஆப்நகரம்

இலங்கையில் போதைப் பொருள்கள் தேடுதல் வேட்டை!

இலங்கையில் போதைப் பொருள்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Samayam Tamil 31 Aug 2020, 1:25 pm
இலங்கையின் மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் காவல் துறையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் போதைப்பொருள் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் 400 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil sri lanka


கெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய 171 தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் 171 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போதைப்பொருள் தொடர்பில் 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத மது பானம் தொடர்பில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நச்சுப்போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக 1997 என்ற தொலைபெசி இலக்கம் செயற்படுவதாக இலங்கை காவல் துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

பல கோடி மதிப்பிலான தங்கம்... இந்தியாவுக்கு கடத்த முயன்ற இருவர் கைது!!

காவல் துறையின் விசேஷ அலுவலகத்தில் இந்த தொலைபேசி சேவை செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொதுமக்களால் தகவல்களை வழங்க முடியும்.

இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பு!

அடுத்த செய்தி