ஆப்நகரம்

இலங்கை முன்னாள் அமைச்சர் கைது: பல மணி நேரம் விசாரணை!

இலங்கை முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார்

Samayam Tamil 19 Oct 2020, 9:06 pm
இலங்கையில் நடைபெற்ற கடந்த அதிபர் தேர்தலின்போது, புத்தளம் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை அரசு பேருந்துகளில் மன்னார் பகுதிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைத்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
Samayam Tamil ரிஷாட் பதியூதீன்
ரிஷாட் பதியூதீன்


அதனடிப்படையில், பொது சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியது. அரசு நிதியை முறைகேடாக செலவிட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், அவரை கைது செய்ய கடந்த 14ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. ஆனால், ரிஷாட் பதியூதீன் அன்றைய தினமே தலைமறைவானார்.

இந்த நிலையில், கொழும்பு புறநகர் பகுதியான தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த ரிஷாட் பதியூதீனை போலீசார் கைது செய்தனர். இந்த தகவலை காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹண உறுதி படுத்தியுள்ளார்.

இலங்கை: கொரோனா வார்டுகளாக மாறும் மருத்துவமனைகள்!

இதையடுத்து, கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியூதீனிடம் குற்றப் புலனாய்வு போலீசார் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வருகிற 27ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி