ஆப்நகரம்

ரணிலை விலைக்கு வாங்கிய ராஜபக்சே: இலங்கை எம்.பி., பரபரப்பு குற்றச்சாட்டு!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை ராஜபக்சே விலைக்கு வங்கியுள்ளதாக இலங்கை நுவரெலியா தொகுதி எம்பி ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்

Samayam Tamil 22 May 2022, 12:00 pm
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், கடும் வன்முறை வெடித்துள்ளது. பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில் ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே வெடித்த மோதல், நாடு முழுவதும் பரவியுள்ளது. வன்முறையில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
Samayam Tamil ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே
ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே


பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மகிந்த ராஜபக்சே தலைமறைவானதையடுத்து, அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை ராஜபக்சே விலைக்கு வங்கியுள்ளதாக இலங்கை நுவரெலியா தொகுதி எம்பி ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம் துறை மங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராஜபக்சே குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்று உள்ளார். ரணில் விக்ரமசிங்கேவை ராஜபக்சே விலைக்கு வாங்கியுள்ளார். இப்போது, ரணில் விக்ரமசிங்கே மக்களை விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறார்.” என்று குற்றம் சாட்டினார்.
திவாலாகும் நிலையில் இலங்கை?- மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்!
கச்சத்தீவு குறித்து இந்திய அரசியல்வாதிகள் பேசினாலும்கூட இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறுவார்களா என்பது சந்தேகமாக உள்ளது என்ற அவர், கச்சத்தீவு பிரச்சினையில் இருசாராரும் சேர்ந்து நடவடிக்கை எடுப்பதே சிறந்தது என்றார்.

இலங்கைக்கு அதிகமான உதவிகளை செய்த நாடு இந்தியா. இந்தியாவின் உதவிகள் இலங்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது. எனவே, இந்தியாவை ஒருபோதும் மறக்க முடியாது. இதற்காக, இந்திய பிரதமர் மோடியையும், அவரது அரசையும் பாராட்டுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசும், முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக மக்களும் இலங்கைக்கு உதவி செய்து வருகின்றனர். அவர்களையும் பாராட்டுகிறோம். பேரறிவாளன் விடுதலையை வரவேற்கிறேன் என்றும் எம்பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி