ஆப்நகரம்

தப்பை தப்பாகச் செய்து சிக்கிய கள்ளநோட்டு கும்பல்

விசாரணை நடைபெற்று வருவதால் கைதானவர்கள் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 28 Oct 2018, 10:17 am
இலங்கையில் 5000 ரூபாய் கள்ளநோட்டு அச்சடிக்க முயன்று தவறுதலாக 50,000 ரூபாய் கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் வசமாக மாட்டிக்கொண்டது.
Samayam Tamil counterfeit-cash-edited-_850x460_acf_cropped


இலங்கையில் கள்ள ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் பரவலாக புழக்கத்தில் உள்ளன. இதைத் தடுப்பதற்கு அந்நாட்டு மத்திய வங்கியும், குற்றப் புலனாய்வுத் துறையும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இலங்கையில் உயர்மதிப்புடைய 5,000 ரூபாய் நோட்டு நோட்டுகளை கள்ளநோட்டுகளாக அச்சடிக்க நினைத்த கும்பல் தவறுதலாக 50,000 என்ற இலக்கத்துடன் கள்ள நோட்டுகளை அச்சிட்டு வெளியிட்டு மாட்டிக்கொண்டிருக்கிறது.

குருநாகல் பிரதேசத்தில் இந்த 50 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியதில் பிரபல வர்த்தகர் ஒருவரும், பிரபல ஆசிரியர் ஒருவரும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

விசாரணை நடைபெற்று வருவதால் கைதானவர்கள் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி