ஆப்நகரம்

சட்டவிரோத பயணம்: இலங்கையில் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக இந்தியாவிற்கு ஆள்களை அனுப்பிவைத்ததாக இலங்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 11 Nov 2020, 3:47 pm
நிதி மோசடியில் ஈடுபட்டு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தப்பிச்சென்ற இலங்கையைச் சேர்ந்தவருடன் தொடர்புடைய சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Samayam Tamil illegal


மனைவி மற்றும் மகனுடன் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச்சென்ற சந்தேகநபர் தமிழக போலிஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரின் மகன் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த நபரை இந்தியாவிற்கு அழைத்துச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக வல்வெட்டித்துறை போலிஸார் தெரிவித்தனர். படகோட்டி என சந்தேகிக்கப்படும் தொண்டைமானாறு பகுதியை சேர்ந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை!

சந்தேக நபருக்கு எதிராக குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு முரணாக ஆள் கடத்தல், வேறு நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்று வந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களுக்கு ஷாக் நியூஸ்: இலங்கை நீதிமன்றம் புதிய உத்தரவு!

அடுத்த செய்தி