ஆப்நகரம்

இலங்கை பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Mar 2018, 2:28 am
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil srilankanpm1-kZ0--621x414@LiveMint


இலங்கையில் அரசு நிதியை கையாள்வதில் கவனம் செலுத்தாதது, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நியமனம் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவுடன் எதிர்க்கட்சிகள் இணைந்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை புதன்கிழமை நிறைவேற்றியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற இலங்கை உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனா கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி