ஆப்நகரம்

அரசு அலுவலகத்துக்கு அதிபர் திடீர் விசிட்... திணறிப்போன அலுவலர்கள்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசு அலுவலகம் ஒன்றுக்கு இன்று திடீர் விஜயம் செய்தார். இதனால் அந்த அலுவலக ஊழியர்கள் திணறி போயினர்.

Samayam Tamil 23 Sep 2020, 11:24 pm
தமது தேவை ஒன்றுக்காக, நாரஹெபிட்டியிலுள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணைய அலுவலகத்துக்கு வந்ததாகவும், ஆனால் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தமது வேலையை செய்து கொடுக்கவில்லை எனவும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயிடம் பெண் ஒருவர் முறையிட்டுள்ளார்.
Samayam Tamil gotabhaya


இதனையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, குறிப்பிட்ட அலுவலகத்துக்கு இன்று (செப்.23) திடீரென விஜயம் செய்தார். அங்கு அலுவலகத்தை பார்வையிட்ட அதிபர், போதுமான ஊழியர்கள் இருப்பதையும் கவனித்தார். இருப்பினும் அவர்கள் சரியான பணியாற்றவில்லை என்பதும் அதிபருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து ஊழியர்களைச் சந்தித்த அதிபர் கோத்தபய, அரசு ஊழியர்களின் பொறுப்புகளை தெளிவுபடுத்தியதுடன், பணிகளை திறமையாகவும் சமரசமின்றியும் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்தியா - இலங்கை இடையே மெய்நிகர் உச்சி மாநாடு!

வாடிக்கையாளர்களை ஏன் வெளியில் அனுப்புகின்றீர்கள், பணிகளை முடிப்பதில் ஏன் தாமதம் என்றெல்லாம் அடுத்தடுத்து அதிபர் கேள்விகளை கேட்டதால், பதில் சொல்ல முடியாமல் அரசு ஊழியர்கள் தடுமாறினர்.

அடுத்த செய்தி