ஆப்நகரம்

இலங்கை அதிபருக்கு அமெரிக்காவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு!!

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவை, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளரான மார்க் டி. எஸ்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 31 Aug 2020, 9:31 pm
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடனான அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளரின் தொலைபேசி உரையாடல் குறித்து, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil usa  and srilanka


அதில், " கொரோனா நோய்த்தொற்றை வெற்றிகரமாக கையாண்டதற்காகவும், சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு அதிபர் கோட்டாபயவுக்கு எஸ்பர் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதேசமயம், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்த தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் அப்போது அவர் வலியுறுத்தினார்.

மேலும், அமெரிக்கா -இலங்கை இருதரப்பு பாதுகாப்பு தொடர்பான முன்னுரிமைகளை மதிப்பாய்வு செய்வது, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது வாய்ப்புகள் குறித்தும் இந்த உரையாடலின்போது இருவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

சர்வதேச விமான சேவை... மீண்டும் தொடங்க ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் முடிவு!!

இதேபோன்று, அனைத்து நாடுகளின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் ஒரு சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் தேவை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி