ஆப்நகரம்

ஆஸ்திரேலிய உதவியுடன் ஆட்கடத்தலை தடுக்க இலங்கை நடவடிக்கை

இலங்கையும், ஆஸ்திரேலியாவும் இணைந்து ஆட்கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Samayam Tamil 14 Oct 2018, 6:23 pm
ஆட்கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளை விரிவுப்படுத்தி வரும் இலங்கை அரசு, அதன் ஒரு அங்கமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான இணைய வழி பயிற்சியை தொடங்கியிருக்கின்றது.
Samayam Tamil Traffciking training event
ஆட்கடத்தலை தடுக்கும் நடவடிக்கையை விரிவுப்படுத்தும் இலங்கை


இந்த பயிற்சிக்கான அம்சங்களை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆலோசனையுடன் ஐ.ஓ.எம் எனப்படும் இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தயாரித்துள்ளது. இதற்கான நிதி உதவியினை ஆஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது.

இப்பயிற்சியை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பேசிய இலங்கை வெளியுறவுத்துறையின் செயலாளர் பிரசாத் கரியவாசம், “ஆட்கடத்தல் என்பது மக்களின் ஆரோக்கியத்தை ஆபத்துக்கு உட்படுத்துவதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளது.

ஆட்கடத்தலுக்கு உட்படும் சாத்தியமுள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உதவியளித்தல் மற்றும் பாதுகாப்பளித்தல் தொடர்பில் வெளிநாட்டில் உள்ள தூதரக அதிகாரிகளை முறையாக தயார்நிலையில் வைக்கும் வகையில் இப்பயிற்சியின் அம்சங்கள் உள்ளன” எனக் குறிப்பிட்டிருக்கிறார். .

இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஆணையர் பீரிஸ் ஹட்செசன், ஆட்கடத்தல் தடுப்பதில் இலங்கை முக்கிய பங்கு வகிப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

நீதித்துறை அமைச்சகம், குடிவரவுத்துறை உள்ளிட்ட இலங்கை அரசின் பல்வேறு துறைகளின் திறன்களை வளர்க்க துணைப்புரியும் ஆஸ்திரேலியா, ஆட்கடத்தல் பிரச்னைகளை கையாள்வதற்கான பயிற்சிகளை இலங்கை கடல்படைக்கும் வழங்கி வருகின்றது.

அடுத்த செய்தி