ஆப்நகரம்

Sri Lanka: பிரதமா் பதவியை ராஜினாமா செய்தாா் ராஜபக்ச

உச்சநீதிமன்ற தீா்ப்பைத் தொடா்ந்து இலங்கை பிரதமா் பதவியில் இருந்து ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளாா்.

Samayam Tamil 15 Dec 2018, 11:37 am
உச்சநீதிமன்ற தீா்ப்பைத் தொடா்ந்து இலங்கை பிரதமா் பதவியில் இருந்து ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளாா்.
Samayam Tamil Rajapakse


இலங்கையில் ராஜபக்ச மீண்டும் பிரதமராக அறிவிக்கப்பட்டதால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இது தொடா்பான வழக்கில் ராஜபக்சே பிரதமராக செயல்பட கீழ் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனை எதிா்த்து ராஜபக்சே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.

வழக்கின் விசாரணையில் ராஜபக்ச பிரதமராக செயல்பட விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தொிவித்தது. மேலும் கீழ் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டது. அது மட்டுமின்றி ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக அறிக்க முடியாது என்று இலங்கை அதிபா் சிறிசேனா தொிவித்துள்ளாா்.

இதனைத் தொடா்ந்து திங்கள் கிழமை புதிய பிரதமா் தோ்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடா்ந்து ராஜபக்ச தனது பிரதமா் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அவரது மகன் நமல் ராஜபக்சே ட்விட்டரில் தொிவித்தாா்.

அதன்படி இன்று பிரதமா் ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை இணையம் வாயிலாக அனுப்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ச பதவி விலகியதைத் தொடா்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவி ஏற்கலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி