ஆப்நகரம்

மோடியுடன் பேசியது ஞாபகம் இல்லை... ராஜபக்ச கிண்டல் பேச்சு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய சில விஷயங்கள் தமக்கு ஞாபகத்தில் இல்லை என்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கிண்டலாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Sep 2020, 7:02 pm
மஹிந்த ராஜபக்ச, கொழும்பில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன்.
Samayam Tamil pms


அவருடனான பேச்சுவார்த்தையின்போது இதுதொடர்பாகவே தான் அதிக கவனம் செலுத்தேன். இருப்பினும், மோடியுடன் தான் இதுகுறித்து பேசிய விஷயங்கள் நினைவில் இல்லை" என்று ராஜபகக்சே கிண்டலாக கூறினார். அதேசமயம் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் வாயிலாக பிரதமரின் அதிகாரம் குறையாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், "மஞ்சள் இறக்குமதிக்கான தடை நீக்கப்படாது என்றும், உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கவே இந்த முடிவு" எனவும் அவர் தெரிவித்தார்.

நண்பர் ராஜபக்சேவுடன் பேசியது மகிழ்ச்சி: மோடி போட்ட தமிழ் ட்வீட்!

அத்துடன், தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 1,000 ரூபாய் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது நானே பிரதமர் என்பதால், பேச்சுவார்த்தையின் மூலமே அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது" என்றும் ராஜபக்சே கூறினார்.

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ( செப்.27) கலந்துரையாடினார். அப்போது, சிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும் என்று ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தியதாக தெரிகிறது.

நட்புறவை விரிவாக்க ஆர்வமாக இருக்கிறேன்: மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி பதில்!

இந்த நிலையில், மோடியுடன் தான் என்ன பேசினேன் என்று தமக்கு சரியாக நியாபகம் இல்லை என்று ராஜபக்சே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி