ஆப்நகரம்

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்களா? விக்னேஸ்வரனுக்கு சவால் விடுக்கும் உதய கம்மன்பில!

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழ் மக்களா என்பது சம்பந்தமாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார்

Samayam Tamil 26 Aug 2020, 8:55 pm
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்ற அமர்வின் முதல் கூட்டத்தில் உரையாற்றிய விக்னேஸ்வரன், தமிழ் மொழி உலகில் பழமையான மொழி எனவும் இலங்கையின் ஆரம்ப குடிகள் தமிழ் மக்கள் எனவும் தெரிவித்தார்.
Samayam Tamil விக்னேஸ்வரன்
விக்னேஸ்வரன்


இந்த நிலையில், விக்னேஸ்வரன் தெரிவித்த தகவல் முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ள பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, இந்த விஷயத்தில் விக்னேஸ்வரனுக்கு எதிர்ப்பை வெளியிடாமல், அந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி கிறிஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் உருவானது. கிரேக்கம், அரபு, சீனம் ஆகிய மொழிகள் தமிழை விட பழமையானவை என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன், இலங்கை தமிழர்களுக்கு ஒல்லாந்தர் காலம் வரை வரலாற்று நூல்கள் எதுவும் இருக்கவில்லை என்றும் உதய கம்மன்பில விளக்கம் அளித்துள்ளார்.

கட்சித் தலைவருக்கு உடல்நலக் குறைவு... எம்.பி.க்கள் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

விக்னேஸ்வரன்களின் பிரிவினைவாதத்தை வடக்கில் உள்ள மக்கள் நிராகரித்துள்ளனர் என்பது தேர்தல் முடிவுகள் காட்டுவதாக தெரிவித்த உதய கம்மன்பில, அங்கஜன் ராமநாதன் மற்றும் டக்ளஸ் தேவானந்த ஆகியோர் விக்னேஸ்வரனை விட அதிகமான தமிழ் மக்களின் விருப்பத்தை பெற்றுள்ளதாகவும் விக்னேஸ்வரனின் வாதங்களை ஏற்றுக்கொள்ள வடக்கில் உள்ள தமிழ் மக்கள் கூட தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி