ஆப்நகரம்

தஞ்சாவூரில் ரயில் தண்டவாளத்தில் சமையல் செய்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் ரயில் தண்டவாளத்தில் சமையல் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

TOI Contributor 17 Oct 2016, 10:07 am
தஞ்சாவூரில் ரயில் தண்டவாளத்தில் சமையல் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil  cauvery issue farmers are cooking on the rail track in tanjavur and agitating
தஞ்சாவூரில் ரயில் தண்டவாளத்தில் சமையல் செய்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் விவசாயிகளுடன் திமுக, காங்., ம.ந.கூ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. ஆளும் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இந்தப் போராட்டத்தில் பெந்க்கெர்கவில்லை.

இன்று காலை முதல் தொடங்கிய இந்த ரயில் மறியல் போராட்டம் நாளை வரை, அதாவது 48 மணி நேரம் நடைபெறுகிறது. தமிழகத்தின் பல முக்கிய ரயில் நிலையங்களில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், தஞ்சை அருகே அய்யனாபுரத்தில் திருச்சி-நாகூர் ரயிலை மறித்த விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
#CauveryIssue : Different Opposition parties stage 'Rail Roko' protest in Thanjavur (TN). pic.twitter.com/YhuSJmCkV1 — ANI (@ANI_news) October 17, 2016 விவசாயிகள் தஞ்சையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சமையல் செய்து தங்களது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் தஞ்சையில் கம்பரசன்கோட்டையில் தண்டவாளத்தில் குடில் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

#cauvery issue - Farmers are cooking on the rail track in Tanjavur and agitating

அடுத்த செய்தி