ஆப்நகரம்

ரயில் நிலையத்தில் கள்ள நோட்டு?: அதிகாரிகள் விளக்கம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கள்ள நோட்டு இருந்தது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

TNN 5 Oct 2016, 2:31 pm
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கள்ள நோட்டு இருந்தது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Samayam Tamil  fake currency loaded in atm near central railway station
ரயில் நிலையத்தில் கள்ள நோட்டு?: அதிகாரிகள் விளக்கம்


சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருந்த பேங் ஆஃப் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் தமிழரசு என்பவர் ரூ.14,000 பணம் எடுத்துள்ளார். அப்போது ஏடிஎம்மில் இருந்து அனைத்தும் ரூ.500 நோட்டுக்களாக இருந்துள்ளது. அதை கொண்டு அருகேயுள்ள கடையில் கொடுத்தபோது, அது கள்ளநோட்டு என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பணத்துடன் பெரியமேடு காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.

தமிழரசின் புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிக்கும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்திய வங்கி அதிகாரிகள் கூறுகையில், செண்ட்ரல் ரயில் நிலைய வங்கி ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்ட பணம் கள்ளநோட்டுகள் அல்ல என்று கூறியுள்ளனர்.

மேலும், ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டாம் என அறிவுறுத்திய 500 ரூபாய் நோட்டுகள் தவறுதலாக நிரப்பப்பட்டுள்ளன என்று விளக்கம் அளித்துள்ள வங்கி அதிகாரிகள், போலீசார் முன்னிலையில், சம்மந்தப்பட்ட தமிழரசு என்பவருக்கு ரூ. 15,000 திருப்பி அளிக்கப்பட்டதாகவும் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி