ஆப்நகரம்

முதல்வர் ஜெயலலிதா குணமடைய சித்தராமையா பிரார்த்தனை

''தமிழக முதல்வர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

TOI Contributor 23 Sep 2016, 3:14 pm
''தமிழக முதல்வர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
Samayam Tamil  karnataka cm siddaramaiah wishes tamil nadu cm jayalalithaa for her speedy recovery
முதல்வர் ஜெயலலிதா குணமடைய சித்தராமையா பிரார்த்தனை


தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து பற்றாக்குறை காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தகவலறிந்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது டுவிட்டர் பதிவில், ''தமிழக முதல்வருக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் பதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்துள்ள அதிகாரபூர்வ செய்தியில், ''தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன். அனைவரின் பிரார்த்தனையும் விரைவில் அவரை குணமடைய வைக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி