ஆப்நகரம்

வெள்ளத்தில் மிதக்கும் அரசுப் பேருந்துகள்: 10,000 லி., டீசல் வீண்!

டீசல் நிரம்பும் இயந்திரங்களில் தண்ணீர் சேர்ந்து 10,000 லிட்டர் டீசல் வீணாகியுள்ளதாகவும் பணிமனை ஊழியர்கள் கூறுகிறார்கள்.

Samayam Tamil 21 Oct 2018, 11:58 am
விருதுநகரில் பெய்த தொடர் மழையால் கண்மாய் உடைந்து வெள்ள நீர் புகுந்ததில் அரசுப் பேருந்து பனிமனையில் 10,000 லிட்டர் டீசல் பாழாகியுள்ளது.
Samayam Tamil 154009501733921


விருதுநகரில் சனிக்கிழமை நள்ளிரவில் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. வடமலைக்குறிச்சி கண்மாயின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இதனால் லட்சுமி நகர், என்.ஜி.ஓ.காலணி ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் தீவில் மாட்டிக்கொண்டது போல தங்கள் வீட்டுக்குள்ளேயே சிக்கித் தவிக்கின்றனர்.

விருதுநகர் - மதுரை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையிலும் மழை கொட்டித் தீர்த்ததால் பேருந்துகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் பேருந்துகளின் பராமரிப்பு வேலைகள் முடங்கியுள்ளன. டீசல் நிரம்பும் இயந்திரங்களில் தண்ணீர் சேர்ந்து 10,000 லிட்டர் டீசல் வீணாகியுள்ளதாகவும் பணிமனை ஊழியர்கள் கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி