ஆப்நகரம்

காவேரியில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் - திறப்பு ஜூலையில் 104 டிஎம்.சி திறப்பு

கர்நாடகாவிலிருந்து காவேரியில் ஜூலை மாதம் மாட்டும் 104 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Aug 2018, 5:42 pm
பெங்களூரு : கர்நாடகாவிலிருந்து காவேரியில் ஜூலை மாதம் மாட்டும் 104 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil cauvery water


உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவேரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பெங்களூருவில் செயல்பட்டு வருகின்றது. இங்கு நடைப்பெற்ற தண்ணீர் திறப்பு குறித்த விவாதத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கர்நாடகாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ் உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.

சில தினங்களாக மழை பெய்வது குறைந்த நிலையில் மீண்டும் கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மீண்டும் காவேரியில் தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது.
இதனால் கபினி, கே.ஆர்.எஸ் அனையிலிருந்து தற்போது ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவேரியில் திறப்பு அதிகரித்துள்ளது. கர்நாடகாவிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாளை மாலைக்குள் தமிழக எல்லையான பிலிகுண்டுவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதன் காரணமாக மேட்டுர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது .

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 8311 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. டெல்டா பாசனத்திற்காக 22,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அடுத்த செய்தி