ஆப்நகரம்

”எங்களை பிரித்துவிடாதீர்கள்”, ஆசிரியை கோதை உருக்கம்

எங்களை பிரித்துவிடாதீர்கள், நிம்மதியாக வாழவிடுங்கள் என்று 10ம் வகுப்பு மாணவனுடன் மாயமான ஆசிரியை கோதைலட்சுமி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

TNN 12 Mar 2016, 7:03 pm
தென்காசி: எங்களை பிரித்துவிடாதீர்கள், நிம்மதியாக வாழவிடுங்கள் என்று 10ம் வகுப்பு மாணவனுடன் மாயமான ஆசிரியை கோதைலட்சுமி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil 10th std student ran with teacher arrest teacher in tirupur district
”எங்களை பிரித்துவிடாதீர்கள்”, ஆசிரியை கோதை உருக்கம்


தென்காசி அருகே கொடிக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் கோதைலட்சுமி(23) ஆசிரியராக பணியாற்றிவந்தார். அதே பள்ளியில் சிவசுப்ரமணியன் (15) என்ற மாணவன் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆசிரியையும், அம்மாணவனும் மாயமானார்கள்.

இந்நிலையில் மாயமான ஆசிரியை மற்றும் மாணவனும் திருப்பூரில் இருப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து திருப்பூருக்கு விரைந்த சென்ற போலிசார் ஆசிரியை கோதைலட்சுமியை கைது செய்தனர்.

பின்னர் , கடையநல்லூர் போலிசார் கோதைலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் இருவரும் காதலித்து ,புதுச்சேரியில் திருமணம் செய்துகொண்டோம். புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் வேலைக்கு சென்றேன், ஆனால் அங்கு எங்களைத் தேடி போலிசார் வந்திருப்பதாக அறிந்ததையடுத்து திருப்பூருக்குச் சென்றோம். அங்கு நாங்கள் வீடு வாடகை எடுத்து குடும்பம் நடத்தினோம்.இதனிடையே நான் கர்ப்பம் அடைந்ததால் , 2 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை.

மேலும், நாங்கள் இருவரும் கணவன் , மனைவியாக வாழ்ந்துவிட்டோம். எங்களை பிரித்துவிடாதீர்கள், எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று போலிசாரிடம் கொரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி